தினமணி 17.06.2013
ரூ. 30 லட்சம் செலவில் சித்தையன் கோட்டையில்
அமைக்கப்பட்டுள்ள புதிய பேரூராட்சிக் கட்டடத்தை, மின்துறை அமைச்சர் நத்தம்
இரா. விசுவநாதன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
அதன் பின்னர், சித்தரேவு ஊராட்சியில் ரூ. 25 லட்சம் மதிப்பில்
அமைக்கப்படும் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்திற்கு அமைச்சர் அடிக்கல்
நாட்டினார்.
இந்த இரு விழாக்களுக்கும் ஆட்சியர் ந. வெங்கடாசலம் தலைமை வகித்தார்.