தினமணி 2.11.2009
புதுகை, அறந்தாங்கியில் உள்ளாட்சி தின விழா
புதுக்கோட்டை, நவ. 1: புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சிகளில் உள்ளாட்சி தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டையில் விழாவையொட்டி நடைபெற்ற பேரணியை நகர்மன்றத் தலைவர் உ. ராமதிலகம் கொடியசைத்து தொடக்கிவைத்தார். பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவுக்கு, நகர் மன்றத் தலைவர் உ. ராமதிலகம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் கே. பாலகிருஷ்ணன், நகர்மன்றத் துணைத் தலைவர் க. நைனா முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாரண, சாரணீயர் இயக்க மாவட்டச் செயலர் வே. குண்சீலன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ. இப்ராஹிம்பாபு, சண்முகபழனியப்பன், செ. நாகராஜன், க. சந்திரசேகரன், எஸ். மீனாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நகரமைப்பு அலுவலர் டி.டி. பிச்சாண்டி வரவேற்றார். நகராட்சிப் பொறியாளர் ஆர். ராஜசேகரன் நன்றி கூறினார்.
விழாவையொட்டி, மாணவ, மாணவிகளுக்கான வினாடி – வினா, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அறந்தாங்கி: அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சி தின விழா நடைபெற்றது.
விழாவையொட்டி, வீரமாகாளியம்மன் நீரேற்று நிலையத்தில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் அளிக்கப்பட்டன. மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகள், மகளிப் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கு நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.ஏ.என். கச்சுமுஹம்மது, நகர்மன்ற உறுப்பினர்கள் மு.வி. பார்த்திபன், நா. முத்துலதா, ச. சுமதி சங்கர், கே. ராமசாமி, என். ரமேஷ், மேலாளர் என்.ஆர். ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் ஆர். முத்துக்குமார், உதவிப் பொறியாளர் எஸ். சந்திரசேகர், துப்புரவு ஆய்வாளர் எஸ். சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.