தினகரன் 31.08.2010
பெங்களூர் மாநகராட்சியில் புதிதாக சேர்த்த பகுதியில் அடிப்படை வசதி
பெங்களூர், ஆக.31: பெங்களூர் மாநகராட்சி 198வார்டுகளாக விரிவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளில் வளர்ச்சி திட்டம் செயல்படுத்த ரூ22 ஆயிரம் கோடி முதலீடு பெற மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிதியின் மூலம் 512 கிலோ மீட்டர் முக்கிய சாலை, 7 தடையில்லா காரிடார் சாலைகள் அமைக்க ரூ3,248.40 கோடி செலவில் செயல்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்துவதின் மூலம் மாநகரில் இருந்து மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கும் வாய்ப்பு கிடைக்கும். நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்காக
ரூ1000 கோடி ஒதுக்கப்படுகிறது. ? பெருநகர் பெங்களூர் மாநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ1000 கோடி செலவில் பலமாடி வணிக வளாகங்கள், சுந்திர பார்க், காந்திபஜார், கருடாமால், ஜெயநகர் வணிக வளாகம், சிரூர் பார்க், அக்கிதிம்மனஹள்ளி விளையாட்டு திடல், மல்லேஷ்வரம், பெங்களூர் கண்டோண்மெண்ட் ரயில் நிலையம், ரசூல் மார்கெட், கும்பார குண்டி ஆகிய 10 முக்கிய போக்குவரத்து சாலைகள் இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்படும். ? தும்கூர் சாலையில் உள்ள யஷ்வந்தபுரம் சதுக்கத்தில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தூரம் சாலை அமை க்க ரூ3.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மைசூர் சாலையில் சிர்சி சதுக்கத்தில் இருந்து நாயண்டஹள்ளி வரை தடையி ல்லா சாலை ரூ178.24 கோடி செலவில் அமைக்கப்படும். வெஸ்ட் ஆப் கார்டு சாலை, தும்கூர் சாலை, மைசூர் சாலைகளுக்கு இணைப்பு கொடுக்கும் நோக்கத்தில் இதை ஆர்ட்டியல் சாலையாக மாற்றம் செய்யப்படும். மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 50 இடங்களில் கிரேட் சபரேட்டர்கள் அமைக்கப்படும். மாநகரில் அடிக்கடி ஏற்படும் தீயணைப்பு சம்பவங்களை தவிர்க்க ரூ1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ? மாநகரில் இருதய பகுதி மற்றும் கட்டிடங்கள் நிறைந்த பகுதிகளில் சாலை அகலப்படுத்தல் மற்றும் மேம்பாலங்கள் அமைப்பது பொருளாதார நிலையில் சாத்தியமில்லாமல் போகிறது. இது போன்ற பகுதியில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எலிவேடட் ஸ்டீல் பிரிட்ஜ் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும். இதுபோன்ற எலிவேட்டர்கள் மெஜஸ்டிக்&கே.ஆர்.மார்கெட், மெஜஸ்டிக்& ஓகலிபுரம், மினர்வா சதுக்கம்&ஹெட்சன் சதுக்கம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ6 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ? பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளை புனரமை க்க ரூ40 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநகரின் முக்கிய சாலைகளில் நடை பாதை அமைக்க ரூ20 கோடியும், இரண்டாம் தர சாலைகளில் நடைபாதை அமைக்க ரூ24 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் ரூ25 கோடி செலவில் கான்கிரட் சாலைகள் அமைக்கப்படும் என்றார்.