போடி நகராட்சியில் உலக மகளிர் தின விழா
போடி நகராட்சி சார்பில் உலக மகளிர் தினவிழா நிறைவு நிகழ்ச்சியில் பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
போடி நகராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா தொடர் கொண்டாட்டம் நடைபெற்றது. இதன் நிறைவு தின நிகழ்ச்சிகள் நகராட்சி ஆணையாளர் எஸ்.சசிகலா தலைமையில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் வி.ஆர்.பழனிராஜ் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் செயல்படும் மகளில் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பேச்சுப்போட்டி, கோலப்போட்டி, இசை நாற்காலி, பொட்டு வைத்தல், கட்டம் விளையாட்டு போட்டி போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மேலாளர் ப.பிச்சைமணி, நகராட்சி சமுதாய அமைப்பாளர்கள் தனிக்கொடி, தமிழ்மணி மற்றும் குழு உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.