மாலை மலர் 06.01.2010
போன் செய்தால் போதும் வீட்டிற்கே சென்று ரத்த பரிசோதனை செய்யும் திட்டம்; சென்னை மாநகராட்சி விரைவில் அறிமுகம்
சென்னை மநாகராட்சி மற்ற மாநிலங்களில் உள்ள மாநகராட்சிகளை விட முன் மாதிரியான திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
பள்ளி மாணவ–மாணவி களுக்கு பல்வேறு சலுகை கள், இலவச பிறப்பு இறப்பு சான்றிதழ், இலவச சவப்பெட்டி, அமரர் ஊர்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த மற்றொரு திட்டத்தை பொங்க லுக்கு பிறகு அறிமுகப்படுத்து கிறது.
வீடு வீடாக சென்று ரத்த மாதிரியை எடுத்து அதை பரிசோதனை கூடத்தில் சோதனை செய்து அவர் களது வீட்டில் கொடுக்கப் படும். இதற்கு கட்டணமாக ரூ. 15 வசூலிக்கப்பகிறது.
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் மாநகராட்சி இந்த திட்டத்தை கொண்டு வருகிறது.
குறிப்பாக காலை நேரத் தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத பெண் களுக்கு இந்த திட்டம் உதவி யாக இருக்கும். ரத்த மாதிரி எடுப்பதற்காக 10 மாநக ராட்சி மண்டலத்திலும் தலா ஒரு ஊழியர் நியமிக்கப்படு கிறார்கள்.
தேவையை பொறுத்து கூடுதலாக ஊழியர்கள் நிய மிக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி யில் இருந்து 1913 என்ற எண் ணுக்கு போன் செய்தால் போதும். உடனே ஊழியர் ரத்த மாதிரி எடுக்க வீட்டிற்கு வருவார். அவர் ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்து அவ ரது வீட்டிற்கே சென்று முடிவை கொடுப்பார்.
சென்னையில் 6 மாநக ராட்சி நவீன மருத்துவ பரி சோதனை கூடங்கள் உள் ளன. இவற்றின் மூலமாக பரிசோதனை மேற்கொள் ளப்படும். வெளி மார்க் கெட்டை விட மாநகராட்சி பரிசோதனைக் கூடத்தில் 40 முதல் 50 சதவீதம் வரை கட்டணம் குறைவாக இருக்கும்.
இ.சி.ஜி. எடுக்க ரூ. 40, அல்ட்ரா சவுண்ட் பரி சோதனை செய்ய ரூ. 150, எக்ஸ்ரே எடுக்க ரூ. 50, ரத்த பரிசோதனை செய்ய ரூ. 15.
நுரையீரல் செயல் பாட்டை சோதனை செய்ய ரூ. 100 என குறைந்த அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.