தினமணி 05.05.2010
மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி
சங்கரன்கோவில், மே 4: சங்கரன்கோவிலில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு மேற்பார்வையாளர், கணக்காளர் உள்ளிட்ட 135 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 42 கணக்கெடுப்பாளர்கள், 18 மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு கணக்கெடுப்பு தொடர்பான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நகராட்சி மேலாளர் ஆ.ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. எஸ்.இளங்கோ, எம்.கலியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பொறியாளர் வாசுதேவன், வனமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் (பொறுப்பு) க.முத்துக்கண்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.