மலிவு விலை உணவகம், பாதாள சாக்கடை திட்டங்கள் ஆய்வு
ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள மலிவு விலை உணவகபணிகளையும், நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிக¬ ளயும் நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் அஜய் யாதவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஆர்.என்.புதூர், கொல்லம்பாளையம், சூளை, காந்திஜிரோடு, வ.உ.சி.பூங்கா பின்புறம், பெரிய அக்ரஹாரம், மரப்பாலம், கருங்கல்பாளையம், பஸ் ஸ்டேண்ட், சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகில் என 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படவுள்ளது.
இதற்கான பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் அஜய்யாதவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கொல்லம்பாளையத்தில் மலிவு விலை உணவகத்திற்காக கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தை பார்வையிட்டு பணி குறித்து கேட்டறிந்தார். மலிவு விலை உணவக பணிகளை விரைந்து முடித்து இம்மாத இறுதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் பாதாள சாக்கடை திட்டப்பணி நடைபெற்று வரும் நந்திநகர் பகுதிக்கு சென்று பாதாள சாக்கடை பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கவும், பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடங்களில் ரோடு களை அமைக்கவும் உத்தரவிட்டார்.
வெண்டிபாளையம் குப்பை கிடங்கிற்கு சென்று அங்கு தினசரி எவ்வளவு குப்பைகள் சேகரிக்கப்படுகிறது என்பது குறித்தும், உரங்கள் எவ்வளவு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைக்கவும், புதிய சா¬ லகள் அமைக்கவும் கூடுதலாக நிதி ஒதுக்கவும், ஊராட்சிக்கோட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த உரிய நிதியை ஒதுக்கவும் கோரிக்கை வைத்தார்.