தினமணி 07.08.2013
தினமணி 07.08.2013
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி
உத்தரமேரூர் பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் சுமதி குணசீலன் தலைமை தாங்கி பேரணியை துவக்கிவைத்தார்.
துணைத் தலைவர் இ.தயாளன் முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.ஆரோக்கியதாஸ் வரவேற்றார்.
பள்ளி மாணவ, மாணவியர்கள் மழைநீர் சேகரிப்பு அவசியம் பற்றி துண்டுப் பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனர்.
இளநிலை உதவியாளர் மே.ச.வெ. ஆனந்தசயனம் நன்றி கூறினார்.
காஞ்சிபுரத்தில்…
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் ஊர்லவத்தை கொடியசைத்து தொடங்கி
வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பு
விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். மேலும்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.
ஊர்வலம் பஸ் நிலையத்தில் தொடங்கி, ராஜவீதி, மார்க்கெட், வி.வி.
கோயில்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பஸ் நிலையத்தில்
ஊர்வலம் முடிந்தது.
இந்த ஊர்வலத்தில் உத்தரமேரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வாலாஜாபாத்
பா.கணேசன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் செல்வம், பேரூராட்சி செயல்
அலுவலர் முனியாண்டி, ஒன்றியக் குழுத் தலைவர் வரதராஜுலு, பேரூராட்சித்
தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் கோவிந்தம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற மழைநீர்
சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சித் தலைவர் தாவூத்பீ உஷேன்
கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள், மழைநீர் சேகரிப்பு
பதாகைகளுடன் வந்தனர். ஊர்வலம் பஜார் வீதி, 4 மாட வீதிகள் மற்றும் நகரின்
முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
இதில் துணைத் தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.