தினமணி 07.08.2013
தினமணி 07.08.2013
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
வளவனூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப் பேரணியை வளவனூர் பேரூராட்சித் தலைவர் ஆர்.டி.முருகேவல்,
கொடியசைத்து தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ந.வி.கன்னியப்பன் முன்னிலை
வகித்தார்.
வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு
தொடர்பான பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு பிரசாரம் செய்தபடி அனைத்து
வார்டுகளின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்றனர்.
இப் பேரணியில் துணைத் தலைவர் என்.தேன்மொழி நாராயணன், தலைமை ஆசிரியர்
ராஜேந்திரன், இளநிலை உதவியாளர் ஷேக்லத்தீப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.