தினமணி 07.08.2013
தினமணி 07.08.2013
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
செஞ்சி பேரூராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், செஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் செஞ்சிமஸ்தான் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி
வைத்தார். செயல் அலுவலர் தமிழ்ச்செல்வம் முன்னிலை வகித்தார். ராஜா தேசிங்கு
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஊர்வலத்தில் கலந்து கொண்டு மழை
நீர் சேகரிப்பை வலியுறுத்தி கோஷமிட்டபடி சென்றனர். மக்களுக்கு
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. செஞ்சி நகரின் முக்கிய
வீதிகளில் ஊர்வலம் நடைபெற்றது.