தினமணி 07.08.2013
தினமணி 07.08.2013
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேரூராட்சி
மற்றும் மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை சார்பில் மழைநீர்
சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை பேரூராட்சித் தலைவர் சுசித்ரா பாண்டியன் துவக்கிவைத்தார்.
அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் எம்.வி.எம். பாண்டியன், பேரூராட்சி துணைத்
தலைவர் எம்.ஏ. பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்கிய வீதிகள்
வழியாகச் சென்ற பேரணியில் மழை சேகரிப்பு குறித்த கோஷங்கள் எழுப்பப்பட்டன.