தினமணி 01.08.2013
தினமணி 01.08.2013
மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி பேரணி
திண்டிவனத்தில் அரிமா சங்கத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரிமா சங்க செயலர் என்.கணேஷ்காந்தி வரவேற்றார். அரிமா
சங்க மண்டல தலைவர் ராஜாராம், திண்டிவனம் நகராட்சி ஆணையர் அண்ணாதுரை
முன்னிலை வகித்தனர். நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணிக்கு
சங்கத்தின் தலைவர் என்.விஜயகுமார் தலைமை வகித்தார்.
பேரணியை நகர்மன்ற தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பலகைகளை பள்ளி மாணவர்கள்
ஏந்தி சென்றனர். நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி நேரு வீதி வழியாக
நகரின் முக்கிய வீதிகளில் சென்றது. சங்கத்தின் பொருளர் டி.ராஜேந்திரன்
நன்றி கூறினார்.