தினமணி 19.07.2013
அவல்பூந்துறை பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நாடகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக
முதல்வரின் சிறப்புத் திட்டமான மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை
மக்களிடையே ஏற்படுத்த, நாடகம், கலைநிகழ்ச்சி, பேரணி, இலக்கியப் போட்டிகள்
போன்றவை நடத்தப்படுகின்றன.
அவல்பூந்துறை பாவடித் திடலில் மழைநீர்
சேமிப்பு விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சித்
தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார்.
சிறப்பு
அழைப்பாளராக மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ கிட்டுசாமி கலந்துகொண்டு
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நாடகத்தைத் தொடங்கிவைத்தார்.
விழாவில்
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கணபதி, கூட்டுறவு வங்கித்
தலைவர்கள் குருமூர்த்தி, பூவை தமிழன், பேரூராட்சி துணைத் தலைவர் பொன்னுசாமி
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை ஜெயபால் நாடக சபா கலைக்குழுவினர்
மழைநீர் சேமிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக்
பயன்பாட்டின் ஆபத்து, குடிநீர் சேமிப்பு குறித்து நாடகம் மூலம் விளக்கினர்.