தினத்தந்தி 07.08.2013
மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சென்னிமலை பேரூராட்சி சார்பில் மழை நீர்
சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தில்
இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் ஜம்பு என்கிற
சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பள்ளி மாணவ,
மாணவிகள் கலந்து கொண்டு சென்னிமலையின் 4 ராஜவீதிகள், பார்க் ரோடு, சந்தை
பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து
பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஊர்வலத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் கே.தெய்வசிகாமணி மற்றும் வார்டு
உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.