தினமலர் 29.09.2010
மாடுகளை பிடிக்க மேயர் உத்தரவு
மதுரை: மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், மேயர் தேன்மொழி தலைமையில், கமிஷனர் செபாஸ்டின் முன்னிலையில் நடந்தது. ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து, அபராதம் விதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் சக்திவேல், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன் கலந்துகொண்டனர்.