தினமணி 10.03.2010
மாநகராட்சி கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
மதுரை, மார்ச் 9: மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மேயர் கேô.தேன்மெôழி தலைமை வகித்தார். துணை மேயர் பி.மன்னன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றன. பெரும்பாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றம், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை அமைத்தல், தெருவிளக்குகள் செய்து தரக் கேட்டல் உள்ளிட்ட மனுக்கள் மேயரிடம் வழங்கினார்கள்.
அனுப்பானடி பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை உடனே சரி செய்து தர வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
வணிக உபயேôகத்தில் உள்ள கட்டடங்களுக்கு உள்ள வரி விதிப்பை மாற்றி குடியிருப்பு உபயேôக வரி வசூலிக்கக் கேôரிய மனு மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி ஆணையôளர் (கிழக்கு) அங்கயற்கண்ணி, மக்கள் தொடர்பு அலுவலர் ரா.பாஸ்கரன், உதவி நகர் நல அலுவலர் மருத்துவர் யசேôதைமணி, கல்வி அலுவலர் அம்மையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.