தினகரன் 17.08.2010
மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள முதல் வகுப்பு ரயில்வே பாஸ் கேட்கும் கவுன்சிலர்கள்
மும்பை, ஆக.17: மும்பை மாநகராட்சி கவுன்சிலர் களுக்கு சமீபத்தில் 100 சதவீதம் அளவுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டது. இலவசமாக லேப்டாப் வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது அவர்கள், பாந்த்ரா&ஒர்லி கடல்வழி பாலத்தில் இலவசமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருப்பதுடன், மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக முதல் வகுப்பு ரயில்வே பாஸ் வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக இரண்டு கவுன்சிலர்கள், மேயர் ஷ்ரத்தா ஜாதவுக்கு கடிதம் எழுதி இருக்கி றார்கள். பத்ராம் நகர் காங்கிரஸ் கவுன்சிலர் பல்தேவ் சிங் மற்றும் மலாடை சேர்ந்த கவுன்சிலர், மம்லாத்தர் ஆகிய இருவரும் மேயருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “சில சமயத்தில் தென் மும்பையில் உள்ள மாநக ராட்சி தலைமை யகத்தில் நடக்கும் கூட்டங் களில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள முடியாமல் போகிறது. எனவே புறநகர் ரயில்களில் செல்ல எங்க ளுக்கு முதல் வகுப்பு பாஸ் தர வேண்டும்.
புறநகர் பகுதிகளை சேர்ந்த கவுன் சிலர்கள் மேற்கு ரயில்வேயில் இருந்து மத்திய ரயில்வேக் கும், ஹார்பர் லைனுக்கும் மாற வேண்டியது இருப்பதால், மூன்று வழித் தடங்களுக்கும் சீசன் டிக்கெட் தர வேண்டும்Ó என கோரியுள் ளனர்.
பாந்த்ரா&ஒர்லி கடல் வழி பாலத்தில் செல்வதற்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து கவுன்சிலர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரி மேயருக்கு கொங்கனிபாடா பகுதியை சேர்ந்த கவுன்சிலர் கடிதம் எழுதி இருக்கிறார்.
கவுன்சிலர்களின் மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து இந்த வாரம் நடை பெறவிருக்கும் மாநகராட்சி பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக மேயர் ஷ்ரத்தா ஜாதவ் தெரிவித்து இருக் கிறார்.