மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
மாநகராட்சி பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கிராஸ்கட் சாலை வணிகர் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
கோவை கிராஸ்கட் சாலை வணிகர் சங்கத்தின் தலைவர் செந்தில்ரத்னா தலைமையில், செயலாளர் ஜோதிமணி முன்னிலையில் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழா நடைபெற்றது.
வடகோவை மாநகராட்சி பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த விக்னேஷ், பிரியங்கா, செய்யது முகமது ஆகிய மாணவர்களுக்கு விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி கல்வி உதவித் தொகையை வழங்கினார்.
கிராஸ்கட் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் நடைபெறுவது போல் கிராஸ்கட் சாலை வணிகர்களை ஒருங்கிணைந்து ஷாப்பிங் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
விழாவையொட்டி நடைபெற்ற கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.