மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் அரசு செயலாளர் ஆய்வு
கோவை: நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலாளர் பனீந்திரரெட்டி கோவை மாநகர வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் வேலுச்சாமி, ஆணையாளர் லதா மற்றும் அலுவலர்களுடன் கோவை மாநகராட்சி கருத்தரங்க கூட்ட அரங்கில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், கட்டிட கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுவதை தடுக்கவும், குப்பைகள் குப்பைத் தொட்டியிலிருந்து கீழே விழுவதற்குள் எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு திட்டங்களில் நடைபெற்று வரும் பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வுக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் லதா, துணை ஆணையர் சிவராசு, மாநகரப் பொறியாளர் சுகுமார், நகர்நல அலுவலர் அருணா மற்றும் பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் கலந்துகொண்டு மாநகர வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து தெரிவித்தார்கள்.