தினமலர் 14.09.2010
மாநகராட்சி விரிவாக்கம் ஆலோசனை கூட்டம்
மதுரை: மதுரை மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த கடந்த மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது மாநகராட்சி எல்லை 52 சதுர கி. மீ., பரப்பளவு உள்ளது. ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் நகராட்சிகள், மேலும் சில பேரூராட்சி, ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்து, எல்லையை 147 ச.கி.மீ., விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதை தமிழ அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கமிஷனர் செபாஸ்டின் பங்கேற்றார். இன்று நடக்கும் கூட்டத்திற்கு பின் இறுதி முடிவு எடுக்கப்படும்.