தினமணி 06.08.2010
மாநகர வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்
திருச்சி
, ஆக. 5: திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு
, மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தலைமை வகித்தார்.குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள்
, ஒருங்கிணைந்த வீடு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டப் பணிகள், அண்ணா நகர் மற்றும் லாசன்ஸ் சாலையை இணைக்கும் பணிகள், சாலை மேம்பாட்டுத் திட்டப் பணிகள், மற்றும் பொதுநிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேலும்
, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனவும், சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் நகரப் பொறியாளர் எஸ்
. ராஜா முகம்மது, செயற்பொறியாளர் எஸ். அருணாசலம், உதவி செயற்பொறியாளர்கள் எஸ். நாகேஷ், எஸ். அமுதவள்ளி, கே. கண்ணன், குமரேசன், உதயகுமார் உள்ளிட்டோர் கலநது கொண்டனர்.எம்
.ஏ.எம். பொறியியல் கல்லூரியில்“
இளவட்டம்‘ விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்திருச்சி, ஆக. 5: திருச்சி சிறுகனூர் எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை தொடங்கின.திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் ஆகியவை சார்பில்
“இளவட்டம்-2010′ என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளைத் தொடக்கிவைத்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ப. தேவதாஸ் மனோகரன் பேசியது:“
கடந்த 1980-ம் ஆண்டுகளில் எய்ட்ஸ் நோய் பற்றி தகவல் பரவியபோது நமது நாட்டில் எய்ட்ஸ் பரவ வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. ஆனால், தற்போது இந்திய அளவில் அதிக எய்ட்ஸ் நோயாளிகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.தவறான வாழ்க்கை முறையால் தமிழகத்தில்
15 வயது முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்களில் 6 சதம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய இளைஞர்கள் குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை அதிலிருந்து விடுபட வேண்டும். மாணவர்கள் சக்தி சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்‘ என்றார் அவர்.தொடர்ந்து
, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.நிகழ்ச்சியில்
, எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.ஏ. முகமது மாலிக், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு திட்ட மாவட்ட மேலாளர் நா. லீலாவதி, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் த. ஸ்ரீரங்கராஜா, கல்லூரி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் ஆர். இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.