மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை உசிலை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
உசிலம்பட்டி: மின்மோட்டார் பொருத்தி குடி நீர் எடுத்தால் கடும் நடவடி க்கை எடுக்கப்படும் என்று உசிலம்பட்டி நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
உசிலம்பட்டி நகராட்சியில் தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சிலர் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுக்கின்றனர்.
இதனால் மற்றவர்களு க்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நேற்று உசிலம்பட்டி நகராட்சி 15, 16வது வார்டுகளில் நக ரா ட்சி ஆனையா ளர் பாப்பம் மாள், பொறியா ளர் குரு சாமி, நகராட்சி மேற்பார்வையாளர் அறிவழகன், குடிநீர் இணைப்பு பொருத்துனர் கதிரேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீடுகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. 12 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நகராட்சி ஆணையாளர் பாப்பம்மாள் கூறுகையில், தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோ கம் செய்யப்படுகிறது. பருவ மழை பொய்த்ததும், அணையில் நீர்மட்டம் குறைந்ததும் தான் இதற்கு காரணம்.
பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டு கொள்கி றோம். மோட்டார் பொரு த்தி குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.