தினகரன் 01.06.2010
மின் மயானம் அமைக்க முடிவு
கிணத்துக்கடவு, ஜூன் 1: கிணத்துக்கடவு பேரூராட்சியில் ரூ.1 கோடியில் மின் மாயனம் அமைக்க பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் விஜயா கதிர்வேல் தலைமை வகித்தார். துணை தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சுந்தர்ராஜன் வரவேற்றார்.
பேரூராட்சி கவுன்சிலர்கள் கதிர்வேல், குணசுந்தரி, பாக்கிலட்சுமி, பத்மாவதி, பால குமார், சுமதி, செந்தில் குமார், ராமசாமி, ஜெய குமார் ஆகியோர் பங்கேற்றனர். கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் ரூ.50 லட்சம் அரசு மானியத்திலும், பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.50 லட்சம் என மொத்தமாக ரூ. 1 கோடி மதிப்பில் பயோகேஸ் மின் மயானம் அமைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.