தினமணி 12.04.2010
மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினால் சட்ட நடவடிக்கை
தஞ்சாவூர், ஏப். 11: தஞ்சாவூர் நகராட்சி குடிநீர் வழங்கல் பணியில் நகராட்சிப் பகுதியில் உள்ள மக்களுக்குத் தேவையான அளவு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருகிறது. நகரின் பல பகுதிகளில் குடிநீர் இணைப்புதாரர்கள், மின் மோட்டார் வைத்து நீரை உறிஞ்சுவதாக நகராட்சிக்கு புகார்கள் வருகின்றன.
எனவே, மின் மோட்டார் வைத்து குடிநீர் குழாயில் நீர் உறிஞ்சுவது நகராட்சி அலுவலர்கள் மூலம் கண்டறியப்பட்டால் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், ரூ. 10,000 அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு இணைப்பு துண்டிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் தஞ்சாவூர் நகராட்சி ஆணையர் த. நடராஜன்.