தினத்தந்தி 17.08.2013
மேச்சேரி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மேச்சேரி பேரூராட்சியில் பள்ளி மாணவ–மாணவிகள் கலந்து கொண்ட மழைநீர்
சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
ஊர்வலத்துக்கு மேச்சேரி பேரூராட்சி தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணை
தலைவர் கண்ணன், செயல்அலுவலர் சண்முகம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து
கொண்டனர்.

நங்கவள்ளி பேரூராட்சியில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
ஊர்வலத்துக்கு பேரூராட்சி தலைவர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். துணைதலைவர்
ரவி, செயல் அலுவலர் கந்தசாமி, கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமையில்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. துணை தலைவா மீனாட்சி,
செயல் அலுவலர் மாதையன் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து
கொண்டனர். மேலும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகமும்
நடைபெற்றது.