மாலை மலர் 01.02.2010
மேட்டுப்பாளையம் சாலையில் அமையும் புதிய பஸ் நிலைய பணியை விரைந்து முடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு
கோவை, பிப். 1-
கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. மாநாட்டு தலைமைக்குழுவின் துணை தலைவரும், துணை முதல்–அமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
மாநாட்டை யொட்டி நடைபெற உள்ள ஊர்வல குழு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அபபோது ஊர்வலம் செல்லும் அவினாசி சாலையின் ஒரு புறம் பொது மக்கள் பார்வை யிட இருப்பதால் அந்த 6 கி.மீ. தூரத்திற்குள் எவ்வளவு பேர் பங்கேற்கலாம் என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப மக்களை அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் துறையினரை மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அதே போல் மேட்டுப்பாளையம் சாலையில் மாநகராட்சி மூலம் கட்டப் படும் பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறும் மாநக ராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவுக்கு துணை முதல்வர் உத்தரவிட்டார்.
மாநாட்டுக்குள் மேட்டுப்பாளையம் சாலையை அகலப்படுத்த வேண்டும். அதற்கான மதிப்பீட்டை தயாரித்து மத்திய அரசுக்கு உடனே அனுப்பி வைக்கு மாறும் அவர் அறிவுறுத்தினார்.
இதை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சரும், ஊர்வல குழு தலைவருமான கே.என். நேரு, மத்திய மந்திரி ராசா, அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, சாமிநாதன், கலெக்டர் உமாநாத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண் டனர்.