தினமணி 30.11.2011
மேட்டுப்பாளையம் நகராட்சி: குழு உறுப்பினர்கள் தேர்வு
மேட்டுப்பாளையம், நவ. 29: மேட்டுப்பாளையம் நகரமன்றத்தின் சட்டமுறை குழுக்களான வரிவிதிப்புக் குழு, நியமனக் குழு, ஒப்பந்தக் குழு மற்றும் மேல்முறையீட்டுக் குழு ஆகிய குழுக்களுக்கு தேர்தல், வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களாக அதிமுக கவுன்சிலர்கள் கே.தனபாக்கியம் (16வது வார்டு), எஸ் மோகன்குமார் (18வது வார்டு), சுயேச்சை கவுன்சிலர் கா.அ.மணி (19வது வார்டு), காங்கிரஸ் கவுன்சிலர் ஜெ.உமா (30வது வார்டு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
நியமனக் குழு உறுப்பினராக பாஜக கவுன்சிலர் ஆர்.ஜெகநாதன் (13வது வார்டு), ஒப்பந்தக் குழு உறுப்பினராக அதிமுக கவுன்சிலர் ஜி.சூரியபிரகாஷ் (8வது வார்டு) ஆகியோரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.