தினகரன் 04.04.2013
மேட்டூர் நகராட்சியில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
மேட்டூர்: மேட்டூர் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தவேண்டிய குடிநீர் இணைப்பு கட்டண நிலுவை அதிகமாக உள்ளது. இதனால், குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை கடந்த 3 நாட்களாக நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்கூடங்கள் ஆகியவைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர்.
மேட்டூர் நகராட்சியில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில், ரூ.45 லட்சத்திற்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பற்றாக்குறையை சரிகட்ட நகராட்சி நிர்வாகம் கெடுபிடி வரிவசூலில் ஈடுபட்டுள்ளது.