மேட்டூர் நகராட்சி அலுவலக பழைய கட்டடத்தில் நீதிமன்றங்கள் இயங்கும்
மேட்டூர்: மேட்டூரில் ஸி3.82 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்ட உள்ளது. அதனால் மேட்டூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் இயங்கி வரும் கட்டடங்கள் அகற்றப்பட்டு அங்கு புதிய நீதிமன்ற வளாகம் அமைய உள்ளது.
எனவே, மேட்டூர் நகராட்சி அலுவலக பழைய கட்டடத்தில் மேட்டூர் சார்பு நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, தற்போது பழைய கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
ஏப்ரல் 2வது வாரத்தில் மேட்டூர் சார்பு நீதிமன்றமும் உரிமையியல் நீதிமன்றமும் இந்த கட்டத்தில் இயங்க உள்ளது. மேட்டூர் சார்பு நீதிமன்ற நீதிபதி மணி இத்தகவலை தெரிவித்தார். அப்போது, மேட்டூர் அணை வழக்கறிஞர் சங்க தலைவர் அண்ணாமலை, மேட்டூர் வழக்கறிஞர் சங்க தலைவர் சித்தன் ஆகியோர் உடனிருந்தனர்.