தினமணி 07.08.2013
தேசிய அடையாள அட்டையின் இரண்டாம் கட்ட பதிவு பணியை
மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, ஆணையர் ஆர். நந்தகோபால் ஆகியோர்
திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
திருமலை நாயக்கர் மகால் திருவள்ளுவர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி,
வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை நாடார்
பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திரெüபதி அம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள
மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களில் இரண்டாம் கட்ட பதிவுப் பணி ஆக. 5
முதல் ஆக. 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப் பணியை மேயர் ராஜன்செல்லப்பா,
ஆணையர் நந்தகோபால் ஆகியோர் திங்கள்கிழமை பார்வையிட்டனர்.
துணை ஆணையர் (பொறுப்பு) சின்னம்மாள், சுகாதாரக்குழு தலைவர் முனியாண்டி,
மாமன்ற உறுப்பினர்கள் ஜெயகீதா, தங்கவேல், ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின்
உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.