மேலூரில் விதிமீறிய கட்டடங்கள் இடிக்க கலெக்டர் உத்தரவு
மேலூர்: மேலூரை நடந்து சுற்றிப் பார்த்த கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, விதிமீறிய கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டார். “விதிமீறியவர்கள் “யாராக’ இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்’ என எச்சரித்தார்.
சுண்ணாம்பு காளவாசல் பகுதியில், விதிமீறிய கட்டடம், அதற்கு குறைவாக வரி விதித்தது குறித்து விசாரித்தார். செக்கடியில் புதிதாக கட்டப்படும் 3 மாடி கட்டடத்திற்கு 1350 சதுர அடி மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால், 10 ஆயிரம் அடிக்கு மேல் கட்டடம் கட்டப்பட்டுள்ளதால், அதை இடிக்க உத்தரவிட்டார்.
நகராட்சியின் வரி வருவாயை அதிகரிக்கும் நோக்குடன், “ரேண்டமாக’ சில கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட வரி குறித்து ஆய்வு செய்தேன். 1700 சதுர கட்டடத்திற்கு 720 சதுர அடி என வரி விதிக்கப் பட்டிருந்தது.
இதனால் விதி மீறிய கட்டடங்கள், வரி விதிப்பு குறித்த வேறு நகராட்சி அதிகாரிகளை கொண்டு ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விதி மீறி செயல்பட்டிருப்பதாக ஆதாரம் இருந்தால், “யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும், என்றார்.
ஒரே நாளில் மேலூரை “கலக்கிய’ கலெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.