தினமணி 05.05.2010
மே மாதம் இலவச பிறப்புச் சான்று வழங்கும் மாதமாக அறிவிப்பு
ராமநாதபுரம், மே. 4: ராமநாதபுரம் நகராட்சியில் இம்மாதம் முழுவதும் இலவச பிறப்புச் சான்று வழங்கும் மாதமாக அறிவிக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பான செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு இலவச பிறப்புச் சான்று வழங்க மே மாதத்தை பிறப்புச் சான்று வழங்கும் மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இம்மாதம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடத்திலும், ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சி அலுலகங்களில் ஆணையரிடத்திலும், பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி அலுவலகங்களில் செயல் அலுவலர்களிடத்திலும் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை பிறப்புச் சான்று கோரும் மனுக்களை கொடுத்து பயனடையுமாறு, ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.