மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும்
தாராபுரம்: தாராபுரத்தில் நகரமன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் கலாவதி தலைமை தாங்கினார். ஆணையர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: சுமதி (அதிமுக) : அமராவதி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை உடனே அகற்ற வேண்டும். பொது மாட்டுத் தொழுவம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தலைவர்: பொது மாட்டுத் தொழுவம் அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினரின் நிதி கோரப்பட்டுள்ளது.
ஆணையர்: அமராவதி ஆற்றில் ஏற்கனவே அமைக்கப் பட்டிருந்த கிணறு மற்றும் குழாய்கள் ஆற்று வெள்ளத்தால் சேதமடைந்திருந்தது. அவைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 40 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். இது தொடர்ந்து கிடைப்பதற்காக, தலைமை நீரேற்று நிலையம் அருகே பொதுப்பணித்துறையினர் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் 40 லட்சம் லிட்டர் குடிநீர் இனி« மல் கூடுதலாக கிடைக் கும்.
மேலும் புதிதாக ரூ. 14 கோடி மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள புதிய திட்டத்தின் மூலம் 25 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக கிடைக்கும். தலைமை நீரேற்று நிலையம் அருகே உள்ள ஆழ்குழாய் கிணறு மூலமாகவும் பல லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது.கதிரவன் திமுக: அமரா வதி அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீரையும், வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களிலும் அனுமதியின்றி மோட்டார்வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.
ஆணையர்: அனுமதியின்றி மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பது சட்டப் படி குற்றமாகும். மோட்டார் வைத்து எங்கு தண்ணீர் எடுத்தாலும் பறிமுதல் செய்யப்படுவதோடு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மன்றத்தில் பல உறுப்பினர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்துவது ஏற்றுக் கொள்ள கூடியதாக இருக்கிறது. முறைப்படி நகராட்சி அளவையாளர் மூலமாக ஆக்கிரமிப்பு உள்ள பகுதிகளை அளந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.