தினமலர் 19.04.2017
வண்டலூர் பேருந்து நிலைய வரைபடம்திருப்தியில்லை! புதிய குழு அமைக்க சி.எம்.டி.ஏ., உத்தரவு

வண்டலுார் கிளாம்பாக்கத்தில்
அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு, ஒப்பந்தநிறுவனம் தயாரித்த வரைபடம்
திருப்திஅளிக்க வில்லை என்பதால், புதிய குழு அமைக்க, சி.எம்.டி.ஏ.,
உறுப்பினர் செயலர் சி.விஜயராஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை
கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில், போக்குவரத்து நெரிசல்
வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், தென் மாவட்டங்களில் இருந்து வரும்
பேருந்துகளுக்காக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய பேருந்து
நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக வருவாய் துறை, 85 ஏக்கர்
நிலத்தை சி.எம்.டி.ஏ.,வுக்கு ஒப்படைத்துள்ளது. இந்நிலத்தில் அமைய உள்ள
பேருந்து நிலையத்துக்கான வரைபடம் தயாரிப்பது திட்டத்தை நிறைவேற்றுவதற்கான
கலந்தாலோசனை பணிக்கான தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
ஒப்பந்தம்
பெற்றதில் இருந்து, மூன்று மாதங்களுக்குள், புதிய பேருந்து நிலையத்தின்
வரைபடத்தை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி,
சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் மாதிரி வரைபடத்தை, சி.எம்.டி.ஏ.,வுக்கு
அளித்தது.
இந்த வரைபடத்தை ஆய்வதற்கான கூட்டம், சி.எம்.டி.ஏ.,
அலுவலகத்தில் அண்மையில் நடந்தது. அதில் ஒப்பந்த நிறுவனம் தயாரித்த வரைபடம்
குறித்து விளக்கப்பட்டது.ஆனால், ஒருங்கிணைந்த தன்மை இன்றி, தனியான பேருந்து
நிலையமாக அது இருந்ததால், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அதிருப்தி
அடைந்தார். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மட்டும் பயன்படுத்தும்
வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதை, அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதனால்
வண்டலுார் பேருந்து நிலைய திட்டம் சிக்கலாகியுள்ளது.
மாற்றம்!
தென்
மாவட்ட பேருந்துகளை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படாமல், மாநகர
பேருந்துகள், மெட்ரோ, மோனோ, புறநகர் மின்சார ரயில் சேவைகளுடன் இணைப்பது,
தனியார் வாகனங்கள் வந்து செல்வது என, ஒருங்கிணைந்த வகையில், வரைபடத்தை
மாற்றி தாக்கல் செய்ய உறுப்பினர் செயலர் உத்தரவிட்டுள்ளார்.இதற்காக, இரண்டு
தலைமை திட்ட அதிகாரிகள், இரண்டு மூத்த திட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை
அமைத்து உத்தரவிடப்பட்டுஉள்ளது. இக்குழுவினர், ஒப்பந்த நிறுவனத்துடன்
கலந்து பேசி, புதிய வரைபடத்தை தயார் செய்வர்.சி.எம்.டி.ஏ., உயரதிகாரி
சர்ச்சை!
முதல்வர்
சட்டசபையில் அறிவித்த, இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது, சி.எம்.டி.ஏ.,
அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது இதில் தெரியவருகிறது.இதற்கான டெண்டரில்,
‘ஒருங்கிணைந்த’ என்ற நோக்கம் தெளிவாக குறிப்பிடப்படாததால், கலந்தாலோசனை
நிறுவன வரைபடம் நிராகரிக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளது. இது போன்ற அலட்சிய
அதிகாரிகளை வைத்து, எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்த
முடியாது.நகரமைப்பு வல்லுனர்கள் – நமது நிருபர் –