வழித்தடம் இல்லாத குப்பை கொட்டும் இடத்தில் நகராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு
வழித்தடம் இல்லாமல் இருந்த பல்லடம் நகராட்சியின் குப்பை கொட்டும் இடத்தை நகராட்சி களின் மண்டல நிர்வாக இயக்குனர் பிரேமா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
வழித்தடம் இல்லை
பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். நகராட்சி பகுதியில் தினசரி 30 டன் முதல் 40 டன் குப்பைகள் சேகரமாகிறது. குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாத தால் பல்லடம் பகுதிகளில் உள்ள பழைய கிணறு, காலி இடங்களில் குப்பைகளை கொட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் குப்பை கொட்டுவதற்கு வசதியாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பல்லடத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேத்தனூர் பகுதியில் 5Ð ஏக்கர் இடம் ரூ.8 லட்சம் மதிப்பில் நகராட்சி சார்பில் வாங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்துக்கு செல்வதற்கு சரியான வழித்தடம் இல்லை. இதனால் இடம் வாங்கியும் குப்பை கொட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
மண்டல இயக்குனர் ஆய்வு
நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் பிரேமா நேற்று பல்லடம் வந்தார். வழித்தடம் இல்லாத கேத்தனூரில் உள்ள சம்பந் தப்பட்ட 5Ð ஏக்கர் நிலத்தை அவர் பார்வையிட்டார். நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை அந்த இடத்தில் கொட்டுவதற்கு தேவையான வழித்தட வசதியை ஏற்படுத் திக் கொடுப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்று தெரிவித்தார்.
ஆடுவதை கூடம்
பின்னர் உழவர் சந்தை அருகே ரூ.35 லட்சத்தில் அமைய உள்ள நவீன ஆடுவதை கூடம் அமைப்பது தொடர்பாக பல்லடம் நகராட்சி செயல் அதிகாரி சாந்த குமார், சுகாதார அதிகாரி சரவணன் ஆகியோரிடம் விவரம் கேட்டறிந்தார்.