தினமணி 25.03.2013
வால்பாறை நகராட்சியில் கணினி, தையல் பயிற்சி
வால்பாறை நகராட்சியில் இன்றும் நாளையும், இலவச கணினி மற்றும் தையல் பயிற்சிகள் நடைபெற உள்ளன.
பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் திறன் மேம்பாடுத் திட்டத்தின் கீழ், கணினி மற்றும் தையல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. திங்கள்கிழமை (இன்று) மற்றும் செவ்வாய்க்கிழமை (நாளை) ஆகிய இரண்டு தினங்கள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமுதாயக் கூடத்தில் நடைபெறும் இந்த முகாமில் இரு பாலரும் கலந்து கொள்ளளாம். முகாமில் கலந்துகொள்ள விரும்பும் பயனாளிகள், தங்களது கல்விச் சான்று, குடும்ப அட்டை நகல், ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றுடன் வந்து பயன்பெறலாம். இத்தகவலை வால்பாறை நகராட்சி ஆணையர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.