தினமணி 05.07.2013
தினமணி 05.07.2013
விதிமீறல் கட்டடத்துக்கு சீல்
சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வியாழக்கிழமை சீல் வைத்தது.
இது குறித்து அந்தக் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை
கீழ்ப்பாக்கம் தாமோதரமூர்த்தி தெருவில் விதிமுறை மீறி கட்டப்பட்ட
அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்தக் கட்டடம் விதிகளை மீறியும், திட்ட அனுமதிக்கு முரணாகவும்
கட்டப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டடத்தில் அனுமதியின்றி
கட்டப்பட்ட அடித்தளம் (பகுதி), தரைத்தளம், 4-வது தளம் ஆகியவற்றுக்கு
வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது.