தினமலர் 19.04.2010
விதிமுறைப்படி கட்டப்படாத திருமண மண்டபங்களுக்கு ‘சீல்‘
தேனி : தேனியில் விதிமுறைப்படி கட்டப்படாத ஆறு திருமண மண்டபங்களுக்கு சீல் வைக்க பெரியகுளம் ஆர்.டி.ஓ., பரிந் துரை செய்துள்ளார். இதன் படி மூன்று திருமண மண்டபங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
தேனியில் நகராட்சி கட்டட விதிமுறைகளின் படி அனுமதி பெறாமலும், கட்டட உறுதிச்சான்று பெறாமலும், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் செயல் பட்ட ஆறு திருமண மண்டபங்களுக்கு ‘சீல்‘ வைக்க நகராட்சி கமிஷனர் மோனி, பெரியகுளம் ஆர்.டி.ஓ., சுப்பிரமணியத்துக்கு பரிந்துரை செய்தார். விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ, திருமண மண்டபங்களுக்கு ‘சீல்‘ வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அல்லிநகரம் நாயுடு திருமண மண்டபம், ஆர்ய வைஸ்ய திருமண மண்டபம், மதுரை ரோட்டில் உள்ள ஜே.மஹால் ஆகிய மூன்று மண்டபங்களுக்கும் ‘சீல்‘ வைக்கப் பட்டது. நாடார் மண்டபம், கங்கை குல வேளாளர் மண்டபங்களுக்கு நோட் டீஸ் வழங்கப்படவில்லை. விரைவில் வழங்கப்பட்டு, இவை இரண்டும் சீல் வைக்கப்படும் என ஆர்.டி.ஓ., சுப்பிரமணியம் தெரிவித்தார்.