விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் குப்பை அள்ளுவதற்காக புதிய வாகனங்கள்: மேயர் தொடங்கி வைத்தார்
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் குப்பை அள்ளுவதற்காக புதிய வாகனங்களை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்.
புதிய வாகனங்கள்
மதுரை மாநகரை தூய்மையாக பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குப்பை அள்ளுவதற்கு தேவையான வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதில் மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது. அதன்ஒரு பகுதியாக மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த பகுதிகளில் குப்பைகள் அள்ளுவதற்காக 17 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது.
அந்த வாகனங்களின் செயல்பாட்டினை மேயர் ராஜன்செல்லப்பா கொடி அசைத்து நேற்று தொடங்கி வை த்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.
குப்பையில்லா நகரம்
நிகழ்ச்சியின் போது மேயர் பேசியதாவது:–
மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளுக்கு தேவையான டம்பர் பின், காம்பேக்டர் பின், டம்பர் பிளேசன் மற்றும் காம்பேக்டர் ஆகிய வாகனங்கள் வாங்குவதற்கு தமிழக அரசு ரூ.10 கோடி மானியமாக தந்துள்ளது. இந்த நிதியில் ஒவ்வொரு பகுதியாக வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது.
முதல்கட்டமாக 17 வாகனங்கள் கடந்த 11–ந் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. இரண் டாம் கட்டமாக இன்று 17 வாகனங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் துப்புரவு பணிகள் சீராக்கப்பட்டு, குப்பையில்லா நகரமாக மதுரை மாற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் நகர் பொறியாளர் (பொறுப்பு) மதுரம், உதவி கமிஷனர் தேவதாஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.