தினகரன் 22.07.2010
விரைவாக குப்பை அகற்ற நவீன வாகனம் அறிமுகம்
சென்னை, ஜூலை 22: குப்பையை நவீன முறையில் அகற்ற ரூ9ட்சத்தில் க்ராப்ளர்களுடன் கூடிய எக்ஸ்ளேட்டர் வாகனங்களை மாநகராட்சி வாங்கி யுள்ளது. சாலைகளில் மேடு, பள்ளங்களை சரிசெய்வதற்காக ரூ20.67லட்சத்தில் 2 சாலை உருளைகள், குப்பை மாற்று வளாகத்தில் இருந்து குப்பையை கனரக வாகனங்களில் எடுத்துச் செல்ல வசதியாக, இரண்டு ‘க்ராப்ளர்களுடன் கூடிய எக்ஸ்ளேட்டர்’ வாகனங்கள் ரூ94லட்சத்திலும் மாநகராட்சி புதிதாக வாங்கியுள்ளது.
இந்த வாகனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி புதுப்பேட்டை மாநகராட்சி பணிமனையில் நேற்று நடந்தது. இதை தொடங்கி வைத்து, மேயர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘சாலைகளை சீரமைக்கவும், பூங்காக்களை பராமரிக்கவும், நவீன முறையில் குப்பை அகற்றவும் என பல்வேறு பணிகளுக்காக
கடந்த 4 ஆண்டுகளில் ரூ 41.2கோடி மதிப்பில் காம்பேக்டர்கள், கனரக வாகனங்கள், முன் பளுதூக்கி இயந்திரம் என 340 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. மாநகராட்சியில் பல ஆண்டுகளாக தற்காலிக ஓட்டுனர்களாக பணியாற்றும் 62 பேர் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனர்’ என்றார்.
நவீன முறையில் குப்பை அகற்ற, மாநகராட்சி வாங்கிய புதிய வாகனத்தை மேயர் சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார்.