தினத்தந்தி 21.06.2013
வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் ஆற்காடு நகரசபை தலைவர் வேண்டுகோள்
ஆற்காடு நகரசபைக்குட்பட்ட 30 வார்டுகள் உள்ளன. இதில் 100–க்கும்
மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் 13ஆயிரத்து 640 வீடுகள் உள்ளன.
இந்த நிலையில் ஆற்காடு பாலாற்றில் மணல் அள்ளப்படுவதாலும் மக்கள் தொகை
அதிகரித்து வருவதாலும் நிலத்தடிநீர் சுமார் 300 அடி முதல் 400 அடி வரை
அதிகபடியான ஆழத்தில் இருந்து எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால்
தண்ணீரின் சுவையும் மாறுகிறது.
ஒரு சில பகுதிகளில் நிலத்தடி நீரே இல்லாமல் தண்ணீரை காசு கொடுத்து வாங்க
வேண்டிய சூழ்நிலையும் உருவாகி வருகிறது. இந்த நிலையில் முதல்–அமைச்சர்
ஜெயலலிதாவின் திட்டங்களில் ஒன்றான மழைநீர் சேகரிப்பு திட்டம் ஆற்காடு
நகரில் உள்ள அனைத்து வீடுகளிலும் அமைத்து நகரசபைக்கு ஒத்துழைப்பு தர
வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.