தினமணி 05.09.2013
தினமணி 05.09.2013
வெங்கம்பூரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திடீர் ஆய்வு
கொடுமுடி அருகே வெங்கம்பூர் பேரூராட்சியில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கலைச்செல்வன் புதன்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.
இந்த பேரூராட்சியில் செயல்படுத்தப்படவுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பொது சுகாதார வளாகங்களை பராமரிக்கும் முறை, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் உள்ளிட்டவை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறைகள், செயல்படுத்தும் விதங்களை அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது வெங்கம்பூர் பேரூராட்சித் தலைவர் சூர்யா சிவகுமார், செயல் அலுவலர் சின்னதுரை மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.