தினமணி 06.04.2010
அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசுக்கு ஓய்வூதியர்கள் பாராட்டு
ஆம்பூர், ஏப். 5: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆம்பூர் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு ஜெயராமன் தலைமை வகித்தார். கோ.ராஜமுக்தி, கே.ஏ.அப்துல் ஹமீது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.