தினகரன் 23.09.2010
அஜென்டாவை கவுன்சிலர் கிழித்தார் தென்காசி நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிதி ஒதுக்கீட்டில் வார்டு புறக்கணிப்பு
தென்காசி, செப். 23: தென் காசி நகராட்சியில் உள்ள சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும் 33 வார்டுகளுக்கும் ரூ.4 கோடியே 81 லட்சம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதில் தமிழக அரசு ரூ.3.51 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து நேற்று மாலை தென்காசி நகராட்சி அவசரகூட்டம் நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம் தலைமை யில் நடந்தது. துணை தலைவர் இப்றாகிம், ஆணை யாளர் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கியதும் சாலை பணிகளுக்கான நிதி யில் விடுபட்ட வார்டுகளை சேர்ந்த 7 கவுன்சிலர்கள் தங்கள் வார்டுக்கும் நிதி ஒதுக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். கவுன்சிலர் ராசப்பா தீர்மானங்கள் அடங்கிய அஜன் டாவை கிழித்து எறிந்தார். உறுப்பினர் செய்யது சுலை மான் நகர்மன்ற தலைவரின் மேஜை மீது இருந்த தீர்மான புத்தகத்தை பிடுங்கியதுடன் எனது வார்டையும் சாலை நிதியில் சேர்க்கவில்லை எனில் தீர்மான புத்தகத்தை கிழித்து எறிந்துவிடுவதாக கூறினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பர பரப்பு எற்பட்டது.
இதனையடுத்து தலைவர் கோமதிநாயகம் விடுபட்ட வார்டுகளில் உள்ள சாலைகளை நகராட்சி நிதி மூலம் சீரமைத்து தருவதாக உறுதியளித்தபின்னர் எதிர்ப்புகளை கைவிட்டனர். கவுன்சிலர்கள் முருகன்ராஜ், வெள்ளப்பாண்டி, கசமுத்து, முகம்மது உசேன், ரபீக்காள், விஜயலட்சுமி, ஜெயலெட் சுமி, வேல்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி நகர்மன்றத்தில் நிதி ஒதுக்கீடு செய்வதில் தங்களது வார்டு புறக்கணிக்கப்படுவதாகக்கூறி கவுன்சிலர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.