தினமணி 19.03.2010
அடிப்படை கட்டமைப்பு பணியை கண்காணிக்க மக்கள் குழு
பெங்களூர், மார்ச் 18: அடிப்படை கட்டமைப்புப் பணிகளை கண்காணிக்க “மக்கள்குழு’ அமைக்கப்படும் என்று சுயேச்சை வேட்பாளர் மா.பாரி அறிவித்துள்ளார்.
பெங்களூர் பாரதி நகர் வார்டில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார் முன்னாள் கவுன்சிலர் பாரி. தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியானதுமே பிரசாரத்தைத் துவக்கிய இவர், தற்போது ஒரு சுற்று பிரசாரத்தை முடித்துவிட்டார்.
தனது 2-வது சுற்று பிரசாரத்தை இப்போது துவக்கியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக பாரதி நகர் வார்டில் எந்தவிதப் பணிகளும் நடைபெறாததால் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் நடமாட முடியாமலும், மழை காலங்களில் தெருக்கள் மோசமான நிலையிலும் ஆகிவிடுகின்றன. பிரசாரத்தின்போது பாரியிடம் மக்கள் இதை முறையிட்டனர்.
அப்போது, தான் தேந்தெடுக்கப்பட்டால், தரமான சாலைகள், தரமான அடிப்படைகட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதை கண்காணிக்கவும், சோதிக்கவும்மக்கள் குழுக்கள் அமைக்கப்படும் என அப்போது அவர் உறுதி அளித்தார். மேலும்பாரதி நகர் வார்டில் மிகவும் பெரிய பிரச்னையாக உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின்கழிவுநீர் அடைப்பை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனஉறுதி அளித்தார்.