தினமலர் 19.02.2010
அண்ணாநகரில் பிளாட்பார ஆக்கிரமிப்புகள் ‘காலி‘
அண்ணாநகர்:அண்ணாநகரில் சாலையோர நடைபாதையில் (பிளாட்பார்ம்) தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்த “மெகா சைஸ்‘ விளம்பர போர்டுகளை மாநகராட்சியினர் அகற்றினர்.சென்னை நகரில் பெரும்பாலான சாலைகளில் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். சாலையோர நடைபாதையை, டீ கடைக்காரர் முதல் பெரிய ஓட்டல் மற்றும் தனியார் நிறுவனத்தினர் வரை ஆக்கிரமித்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு பகுதியில், கடைகள், ஓட்டல்களின் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து சென்று விபத்தில் சிக்குகின்றனர்.இத்தகவல் மேயர் சுப்ரமணியம், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி கவனத்திற்கு சென்றது. சென்னை நகரில், பாதசாரிகளுக்கு இடையூறாக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மண்டலம் 5ல், அண்ணாநகர் 18 மற்றும் 21வது மெயின் ரோடு 6வது அவென்யூவில் உள்ள சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப் பட்டிருந்த, ஓட்டல் மற்றும் கடைகளின் விளம்பர பலகைகளை அகற்றப்பட்டன. மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் பிரதாப், துப்புரவு அலுவலர் சதாசிவம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர்.அகற்றப்பட்ட பொருட்களை, மூன்று லாரிகளில் ஏற்றிச் சென்றனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டத.