அண்ணா பஸ் நிலையத்தில் நடைமேடை கடைகள் அகற்றம்
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நடைமேடையில் வைக்கப்பட்டிருந்த 29 கடைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் நடைமேடையில் கடைகள் வைக்கப்பட்டிருந்தன.
இது பயணிகள் செல்வதற்கு இடையூறாக இருப்பதாகக்கூறி இயற்கை வள பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் ஆர்.எஸ். லால்மோகன், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நடைமேடையில் உள்ள 29 கடைகளை உடன் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கடைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது. அண்ணா பஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள் முன்னிலையில் கடைகள் அகற்றப்பட்டன.