அனுமதியின்றி வைத்திருந்த பேனர்கள் அதிரடி அகற்றம்
கோபி, : கோபி நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
கோபி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வந்தன. குறிப்பாக பஸ் நிலைய பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பஸ் நிலையத்தினுள் இருந்து வரும் பேருந்துகள், ஈரோடு – சத்தி ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு சரியாகத் தெரிவதில்லை என்ற புகார் எழுந்தது.
அதைத்தொடர்ந்து பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற நகராட்சி ஆணையாளர் ஜான்சன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த 20க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்களை அகற்றினர்.