தினமணி 18.06.2013
தினமணி 18.06.2013
அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு
கோத்தகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து
வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க வேண்டுமென, பேரூராட்சித்
தலைவர் சை.வாப்பு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கோத்தகிரி பகுதியில் குடிநீர்
பிரச்னை இருந்தபோதிலும், அவை பேரூராட்சி மூலமாக தீர்த்து வைக்கப்பட்டது. பல
பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில் கோத்தகிரி பகுதி முழுவதும் ஒரு வாரமாக மழை பெய்து
வருகிறது. எனவே பேரூராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள், தங்கள் வீடுகளில்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க வேண்டும்.
இதனால் வரும் நாள்களில் தண்ணீர் பிரச்னை வராமல் தீர்க்க முடியும்; இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.