தினகரன் 19.06.2013
அனைத்து வீடு, கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் கட்டாயம் திருச்சி மாநகரில் பணி துவங்கியது
திருச்சி, : திருச்சி மாநகரில் உள்ள அனைத்து வீடு, கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் கட் டாயமாக்கப் பட்டுள்ளது.
திருச்சி
மாநகரில் வசிக் கும் மக்களுக்கு வழக்கமாக 110 மில்லியன் லிட்டர் காவிரி
குடிநீர் நாள்தோ றும் விநியோகம் செய்யப் படும். ஆனால் பருவமழை தவறியது,
நிலத் தடி நீர் மட்டம் குறைவு ஆகிய காரணங்களால் தற்போது காவிரியிலிருந்து
போது மான அளவு குடிநீரை உறிஞ்ச முடிய வில்லை. எனவே தினமும் 90 மில் லியன்
லிட்டர் குடிநீர் மட் டுமே சேகரிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. இந்த
தட்டுப்பாட்டால் பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வரு கின்றனர்.எனவே
இனி வரும் ஆண்டுகளில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருப்ப தற்கான முன்னெச்
சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு
பகுதியாக திருச்சி மாநகராட்சியில் உள்ள 1.93 லட்சம் வீடுகள் உள்பட சுமார் 2
லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண் டும் கட்டாயமாக
அமல் படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
இதற்காக மாநகராட்சி மேயர் ஜெயா
தலைமையில் பொது சுகாதாரத்துறை, பொறியாளர் பிரிவு, வரு வாய் பிரிவு
ஆகியவற்றில் பணியாற்றுவோரை கொண்டு 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினர் நேற்று முதல் 65 வார்டுகளிலும் களப் பணியில் ஈடுபட தொடங்கி
யுள்ளனர்.
இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி கூறுகையில், இனிவரும்
காலங்களில் குடிநீர் தட்டு ப்பாடு ஏற்படால் இருக்க வேண்டுமெனில் நிலத்தடி
நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டும்.
அதற்கு மாநகரில் உள்ள 1.93 லட்சம்
வீடுகள் உள்பட சுமார் 2 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம்
அவசி யம் ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட சர்வேயின்படி மாநகரில்
60 சதவீத கட்டிடங்களில் 2002&2003ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட
மழைநீர் சேகரிப்பு முறை நன்றாக உள்ளது. 20 சதவீத கட்டி டங்களில் பராமரிப்பு
பணி யும், 20 சதவீத கட்டிடங்க ளில் புதிதாக அமைக்கவும் வேண்டியுள்ளது.
இந்த பணிகளை மேற்கொள்ள 20 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது.
இவர்களும்,
மாநகராட்சி கட்டிட ஒப் பந்தாரர்களும் வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய
தொடங்கி விட் டனர். இது வரை மழைநீர் சேகரிப்பு முறை இல்லாத கட்டிடங் களில்
பொது மக் கள் தாங்களா கவே அமைத்துக் கொள்ள லாம். இல்லை யெனில் மாநகராட்சி
குழுவினர் அந்த பணியை மேற் கொள்வர். அதற்கான செலவை அந்த வீடுகளில்
வசிப்போர் கொடுத்து விட வேண்டும். தென்மேற்கு பருவமழை தொடங்க உள் ளதால்
வரும் ஜூலை 31ம் தேதிக்குள் மாநகரிலுள்ள 2 லட்சம் வீடு, கட்டிடங்க ளிலும்
மழைநீர் சேகரிப்பு முறையை ஏற்படுத்துவதற் கான பணிகள் முடுக்கி
விடப்பட்டுள்ளன என்றார்.